
இன்று பிறந்த நாள் காணும் சஞ்சய் காந்திக்கு என மனமார பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :) :)
அனைத்து வெற்றிகளும் உங்கள் வாழ்வில் கிடைக்க வாழ்த்துக்கள்!
'கண்ணுக்கு கீழ ஏன்டீ இவ்வளவு கருப்பா இருக்கு? '
'தினம் ராத்திரி முழுக்க கண்ட புஸ்தகத்தை படிச்சியா ?'
'கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்தா அப்புறம் கருவளையம் வராம என்ன செய்யும் ? '
'சக்கரை டப்பாவை எங்கடீ காணடிச்ச ?
'அதுதான பார்த்தேன்.. இன்னும் என் கண்ணுல அந்த அழுக்குத் துணி மூட்டை காணலைனு ! ஓரமா ஒளிச்சு வெச்சுருக்கியா? '
'நான் இல்லாத நேரம் பார்த்து இன்னும் பத்து புஸ்தகம் வாங்கிருக்க போலிருக்கு ?'
'நாம இருக்கறதோ புறாக்கூண்டு மாதிரி ஒரு வீடு .. இப்படியே பத்து பத்தா புஸ்தகம் வாங்கினேனா, அப்புறம் அதை எல்லாம் உள்ளே வெச்சுட்டு, நகர இடம் இல்லாம நாம வாசப்படியில் தான் படுத்துக்கணும் '
'போர்வையெல்லாம் ஒழுங்கா மடிச்சு வைக்கறதே கிடையாது போலிருக்கு ? '
'கறுத்து போயிருக்கியே நீ ! தினமும் ஒழுங்கா குளிக்கிறியா? '
'ஒழுங்கா தலை கூட பின்னிக்க தெரியலை உனக்கு'
'கடவுளே!! எல்லாருமே என் பொண்ணை ஏன் இப்படி வளர்த்துருக்கேன்னு சொல்லுவாங்களே '
'நான் ஊருக்கு போன பத்து நாள் ஏதோ இந்த வீட்டுக்குள்ள மதம் புடிச்ச யானை வந்து தொம்சம் பண்ண மாதிரி இருக்கு '
'இதை சரி செய்ய ஒரு மாசம் ஆகும்'
'காப்பி தம்ப்ளரை டி.வி மேசை மேல வைக்காதேன்னு எவ்வளவு தடவை சொல்லிருக்கேன் !'
'சாப்பாடு தட்டை மடியில் வெச்சு சாப்பிடாதே'
'ஃப்ரிட்ஜை திறந்தா எல்லாப் பொருளும் என் மேல விழுது'
'ஏன்டீ கப் நூடுல்ஸு சாப்பிட்டே உடம்பை கெடுத்துக்கிற? '
'புதுசா தோசை மாவு அரைச்சு வெச்சுட்டு போனேனே. தோசை செஞ்சு சாப்பிடலியா? மாவு அப்படியே இருக்கு !'
'அந்த மிதியடி எப்படி சமையல் கட்டுக்கு வந்தது?'
இப்படி உன் ஆயிரம் கேள்விகளுக்கும் அசராமல், வாயைத் திறவாமல் , திருட்டு முழி முழித்தே பதில் சொல்லனும்னு ஆசையா இருக்கு அம்மா.
நாளை உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
நான்
Photo credits:
goodtoknow.co.uk, racgp.org.au, babble.com
ப்ரஜெக்ட் லீடர் : புதுசா
பிரெஷர் : இல்லை பழசு
PL: நீ எத சொல்ற?
Fresher: நீ எத கேக்குற ?
PL: நான் உன்ன கேட்டேன் ...
Fresher: நான் CODE ன்னு நினைச்சேன் ...
PL: CODE Copy Paste ன்னு நான் பத்தடி தூரத்துல வரும் போதே தெரியுது .. நீ புதுசு தானே?
Fresher: ஆமா
PL: ம்ம்ம் Project Leader வரும்போது ஷலூட் பண்ணனும்னு உனக்கு டிரைனிங் ல சொல்லித் தரலியா?
Fresher தேட ஆரம்பிக்கிறான்
Fresher: எங்க எங்க எங்க?
PL: யாய் யாய் யாய் மிஸ்டர் .. PL னு சொன்னது என்னைத்தான்..
Fresher ஷலூட் அடிக்கிறான்.
PL: Leftla ஷலூட் அடிக்கச் சொல்லி உனக்கு எந்த PL சொல்லி குடுத்தான் ?
Nonsensuu.. shalute on the right hand!
Fresher கையில் இருக்கும் குண்டு "Java - Complete Reference by Herbert Schildt" புத்தகத்தை PL காலில் போட்டுவிட்டு ஷலூட் செய்கிறான். புத்தகம் PL காலில் விழுந்து , ரத்தம் வருகிறது..
Fresher: சாரி சார்.
PL: என்ன வெட்டி விளையாட்டு இது ?
Fresher: ஐயோ ரத்தம்
PL: என்னடா ரத்தம் ? இத பார்.. இந்த விளையாட்டை எல்லாம் வீட்டுல மூட்ட கட்டி வெச்சுட்டு வர பாரு. அது போக நீ என்ன பத்தி நெறையா தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. என் Cubicle க்கு வா.
Fresher: ஒரு Doubtuu..உங்களுக்கு Cubicle எல்லாம் குடுத்துருகாங்களா?
PL: கடுப்பாகி .. "FOLLOW ME"
Java புத்தகத்தை எடுப்பதுபோல் PL காலை எடரிவிடுவது போல் செய்கிறான் Fresher.
PL: யாய் யாய் யாய் .... ரொம்ப technicalla aim பண்றானே இவன். இரு உன்ன வெச்சுக்குறேன். யாய் யாய் ஏன்டா . மடிச்சு வெய் உள்ள . சேட்டை !
PL cubicle க்கு செல்ல, Fresher பின்தொடருகிறான்.
PL: ஒரு PL ஆச்சே பாவம் ஒரு வணக்கத்த வெச்சுட்டு போவோம்னு இல்லாம book ஐ எடுத்து காலுல போடறது.. கால் நகத்தை நோண்டி விடறது .
என்ன பத்தி உனக்கு நெறையா தெரிய வேண்டியது இருக்கு.
ஒரு சிங்கத்த பத்தி இன்னொரு சிங்கமே சொன்னா அது அசிங்கம்
Fresher: சரி என்ன பண்ணலாம் ?
அருகில் இருக்கும் இரண்டு வருட அனுபவம் உள்ளம் டீம் மெம்பெர் ஒருவரை அழைக்கிறார் PL.
PL: யோவ், வா இங்க , என்ன பத்தி இந்த Fresher க்கு எடுத்துச் சொல்லு
டீம் மெம்பெர்: எ எ எ என்னத்த பத்தி இந்த ஆளுக்கிட்ட சொல்றது?
PL: எதையாச்சும் சொல்லுய்யா ! @%$$%@
டீம் மெம்பெர் : "சார் ஒரு ***** "
PL: என்ன சொல்ல சொன்னா நீ என்ன சொல்லிட்டு இருக்க?
Fresher: "என்ன PL சார் , என்னவோ **** சொன்னான் "
PL: யாய் நீ ஒன்னும் சொல்லவேணாம் போ" , என்று டீம் மெம்பெர் ஐ விரட்டுகிறார்.
"Attention"
"என்னப் பத்தி நானே சொல்றேன் கேட்டுக்க "
"என் பேரு EOD ஏகாம்பரம் "
Fresher: "தெரியும்"
PL: எனக்கு இன்னொரு பேரு இருக்கு . "ever bench" ஏகாம்பரம் .
offshore லேந்து onsite வரைக்கும் இருக்குற அத்தனை "End of Day (EOD) work" முடிக்காத மட்டமான டீம் மெம்பெர்ஸ் ஐ ப்ராஜெக்ட் ரிலீஸ் பண்ணிட்டு ஸ்பெஷல் appointmentla இங்க வந்து சேர்ந்துருக்கேன்.
Fresher கேவலமாக சிரித்து தொலைக்கிறான் .
PL: "என்ன பேசிட்டு இருக்கும்போதே பீ பீ ஊதுற?"
Fresher : "உங்கள பார்த்த சிரிப்பு PL மாதிரி இருக்கு சார்"
PL: ஷாக்காகி .. "சிரிப்பு PL ஆ ? டேய் சீரியஸா பேசிட்டு இருக்குறேன் , சிரிப்பு PLங்குற? .. "
பின்பு யோசித்துவிட்டு..
"என்ன பத்தி HR யார்கிட்டயும் விசாரிச்சியா? "
Fresher: "ம்ம்ம்ம்ம்"
PL: "விசாரிச்சுட்ட ... அதான் இந்த பேச்சு .. போய் tea வாங்கிட்டு வா "
Fresher: "புதுசா வேலைக்கு வந்த programmera tea வாங்கிட்டு வர சொல்றது தப்பிலையா சார்?"
PL: "இது மட்டும் வக்கனயா பேசு. PL க்கு வணக்கம் வைக்க சொன்னா மட்டும் காலை குத்து"
Fresher: "சார்ர்ர் , அது வந்துதுதுது ..."
PL: "NONSENSE, GO AND TAKE A CUP OF TEAAAAAAA"
Fresher: " எஸ் சார் " என்று சொல்லி திரும்பவும் அந்த குண்டு புத்தகத்தை PL காலில் போட்டுவிட்டு ஓடுகிறான் .
PL: "வந்த உடனேயே காலுல விரல நசுக்கிட்டு போயிட்டானே .. DANGEROUS PELLOOOW"
குட்டிச் சீனுவுக்கு அன்று கால் நிலத்தில் படவில்லை.
"யம்மோவ் இத பாத்தியா" என்று வாசலில் பாத்திரம் தேய்த்து கொண்டிருந்த அம்மாவிடம் ஓடி வந்தான்.
"என்ன ராசா ... ஏன் இம்புட்டு வேகமா ஓடிக்கினு வர ? " என்றால் அம்மா பாத்திரத்தை கழுவியபடி.
"எங்க இச்கூளுலேந்து கிரிக்கெட்டு விளையாட்டுக்கு இட்டாந்தாங்கால , அங்க சச்சினு எனக்கு கையெழுத்து போட்டு இந்த ஸ்டம்பை குடுத்தாரு "
அவனின் சிறு கைகள் அந்த கிரிக்கெட் ஸ்டம்பை இறுக்கமாக பற்றி இருந்தன.
"எங்கே காமி " , ஆசையாக பார்த்தாள் அம்மா.
"யாரு அந்த டென்டுலக்கர் தம்பியா கையெழுத்து போட்டது ? பருவாலியே ...
இத அங்க வெச்சுட்டு வா.. வந்து குந்திகினு இத சாப்டுட்டு போ "
"இரும்மா நான் பக்கத்து வீட்டு வேணுகிட்ட காட்டிட்டு வரேன் "
சீனுவுக்கும் வேணுவுக்கும் என்றைக்கும் சண்டை இல்லாமல் இருந்ததில்லை . ஒரே வகுப்பில் படிக்கும் இருவருக்கும் ஸ்லேட் காலத்தில் இருந்து தகராறு தான்.
சீனுவுக்கு அந்த ஸ்டம்பை வேணுவிடம் காட்டிவிட்டு அவனை உசுப்பேத்துவதில் அலாதி சந்தோசம். அந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
சீனுவின் குடும்பம் கொஞ்சம் பெரியது . அப்பா , அம்மா , அக்கா, தம்பி , சீனு என ஐந்து பேர். அப்பா பேருந்து நிலையத்தில் சாலை ஓர பாக்கெட் குளிர்பானம் , தண்ணீர் பாக்கெட்டுகள், குளிர்ந்த மோர் விற்பவர். மிகுந்சிரமத்தில் தான் அந்த மூன்று குழந்தைகளும் படிக்கின்றனர். அதுவும் அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் தான்.
"இவனுங்கலேலாம் படிச்சு என்னத்த கிழிக்கப் போறானுங்க ? . கடைல உக்காந்தாலாவது காசு கிடைக்கும் " என்பார் அப்பா.
"அடேய் இந்த இட்டிலிய சாப்டுட்டு போடா"
"போம்மா வேணாம் ... நான் போகணும் இன்னைக்கு இஸ்கூலுல நிரய்யா பசங்ககிட்ட காமிக்கனும் "
அவன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து அவள் பார்த்ததே இல்லை.
"டேய் எங்கடா ஓடற................. ? "
"யம்மோவ் இரும்மா , பேப்பர் சுத்தி எடுத்திகினு போறேன் .. இந்த அழுக்கு பயலுக கை பட்டிடுச்சுன்னா அப்பறம் எல்லாம் அழிஞ்சு போய்டும் "
சாலையோர வீட்டின் பின்புறத்துக்கு செய்த்தித்தாள் பொறுக்க ஓடினான் குதித்துக் கொண்டு .
"ஏண்டி பாத்திரத்த விலக்கினியா? " சீனுவின் அப்பா கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் . கையில் பெரிய ஐஸ் கட்டி. சுமார் பத்து கிலோ எடை இருக்கும். குளிர் பானங்களிலும் , மோரிலும் கலந்து குடுப்பது அவரின் வழக்கம்.
"எங்க போனான்னுங்க உன் புள்ளைங்க. படிப்ப நிறுத்திட்டு வேலைக்கு அனுபலாம்னா இவ கேட்டா தான ? எல்லாம் புத்தி கெட்டு அலையுராளுக"
"யோவ் இப்போ உனக்கு இன்னா வேணும்குற ? . புள்ளைக படிக்கறத கெடுக்கரதில்லையே இரு .. அய்ய்யய "
ஐஸ் கட்டியை அடிக்க பக்கத்திலிருந்த குச்சியை எடுத்தார் அப்பா .
ஓங்கி அடித்தார். குச்சி நாலு துண்டுகளாக சிதறி அருகிலிருந்த சாக்கடையில் விழுந்தது.
"இது வேற ஒரு எழவு.. இன்னா குச்சிடீ இது "
சீனு பேப்பருடன் ஓடி வந்தான்.
கோபத்தில் அவர் விட்டெறிந்த குச்சி அவன் புத்தகப் பை அருகே விழுந்தது.
பின்குறிப்பு : இந்த சம்பவம் உண்மையாக நடந்தது . நான் பேருந்தில் அமர்ந்த்திருந்த பொழுது, உண்மையாகவே ஒருவர் ஸ்டம்பை எடுத்து ஐஸ் கட்டியை உடைக்க முயல, ஸ்டம்பு உடைந்தது தெறித்தது. அதைக் கண்டு ஒரு சிறுவன் ஓடி வந்து அந்த உடைந்த பாகங்களை எடுத்து சேர்க்க முயன்றான் :( . மற்ற சம்பவங்கள் எல்லாம் என் கற்பனை.
1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
எனக்கு நினைவு தெரிந்து ஏழு - எட்டு வயதிலிருந்து பார்க்க ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன். ஆனால், என் அம்மா கருவுற்றிருந்த பொழுது பார்த்த படங்கள் , 'முதல் மரியாதை' மற்றும் 'சிந்து பைரவி' .
அதன் பின் , இருபது தடவை மேல் அந்த இரு படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் . இப்பொழுது வரைக்கும் அலுக்கவில்லை.
அதனால் , நான் பிறக்கும் முன்பே படம் பார்த்திருக்கிறேன் என்றும் எடுத்து கொள்ளலாம் .
1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
ரோஜா .. கிழக்கு சீமையிலே .. இரண்டு படங்களையும் தஞ்சை குமரன் தியேட்டரில் பார்த்தேன் பெற்றோருடன்.
1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?
இரு படங்கள் முடியும்போதும் கண்கள் பனித்தன.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
பொல்லாதவன். என் பிரியமான தோழிகளுடன் கோவையில் பார்த்தேன்.
எனக்கு மிகவும் பிடித்தது. அருமையான படம்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
குருவி.
SETC பேருந்தில் சென்னையிலிருந்து தஞ்சை வரும் பொழுது.
தாங்க முடியலை.
விஜய் வில்லனிடம் விடும் பஞ்ச் டயலகுகள் சகிக்கலை.
படத்தின் கதையாசிரியர் , டைரக்டர் ஆகியோரைத் தான் குறை சொல்ல வேண்டும் .
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
- மகாநதி .

இது போல யார் வாழ்க்கையிலும் நடக்க கூடாது என்று நான் அவ்வப்பொழுது வேண்டிக்கொள்வது . துயரத்தின் உச்சி அந்தத் திரைப்படம். கல்கத்தா காட்சிகளை நினைத்தாலே என் கண்களில் குருதி வருகிறது.
- குருதிப்புனல்.
மிகவும் பிடித்த வரிகள் நாசர் மற்றும் கமல் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகள்.
"வீரம்னா என்னத் தெரியுமா ? பயம் இல்லாத மாதிரி நடிக்கறதுதான் " என்று கமல் கூறும் வரிகள் அவ்வபொழுது என் நினைவில் நின்றாடும்.
- பாச மலர்.
இந்த படத்தை பலமுறை பார்த்து அழுதிருக்கிறேன். எனக்கும் சிவாஜி போல அண்ணன் இருக்காதா என ஏங்க வைத்த படம்.
- எதிர் நீச்சல்.
- கந்தன் கருணை .
- என் மகன் (எம்டன் மகன்).
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
சினிமாவில் புகைப்பிடிக்கக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியது. மிகவும் வரவேற்கத்தக்க ஆணை இதுவாகும்.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
- ஷங்கர் படத்தில் வந்த முக்காலா முக்காபுலா பாட்டை பார்த்து பிரம்மித்தவள் நான்.
- அதன் பின் ரசித்து ஜீன்ஸ் படத்தின் இரட்டை வேட தொழில் நுட்பம். ஒரு காட்சியில் இரு பிரஷாந்துகளும் கட்டிக் கொள்வார்கள். அதை பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.
- கண்ணோடு காண்பதெல்லாம் பாடல்.
- 'அம்மன்' படத்தின் கிராபிக்ஸ்
- ஏதோ ஒரு சாமி படத்தில் ஒரு யானைக் குட்டி 'ஷர்ட் பான்ட்' போட்டுகொண்டு கிரிக்கெட் ஆடும் . அதுவும் தான்.
- மணிரத்னம் உயிரே படத்தில் வரும் லைட்டிங் விளையாட்டுக்கள் .
உண்டு. சினிமா வம்பிலிருந்து கேமரா தொழில்நுட்பம் வரையில்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இயக்குனர் அமீரின் ராம் திரைக்கதை புத்தகத்தை வாங்கிப் படித்தேன்.
7.தமிழ்ச்சினிமா இசை?
சூப்பர் . ராஜா , ரகுமான் , எம்.எஸ்.வி என்று எல்லாரையும் எனக்குப் பிடிக்கும் .
குத்து பாடல்களை நான் விரும்புவத்தில்லை.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
1. A beautiful Mind - John Nash என்பவற்றின் வாழ்க்கை சரித்திரம். நோபெல் பரிசு பெற்ற இவர் Schizophrenia என்னும் நோயில் அவதிப்பட்டு அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பது தான் கதை.

2. Ice Age 1 & 2 - அந்த Mammoth பார்க்க என் தாத்தாவின் கம்பீரத்தை பார்ப்பது போல இருக்கும். Sid - சரியான வாய். ரொம்ப அழகு :)
3. Charlie Chaplin படங்கள் பார்ப்பதுண்டு.
4. Cast Away - கடைசி காட்சியில் அவனுடைய காதலியை மீண்டும் அவள் வீட்டிற்க்கே கொண்டு வந்து விடுவான் நாயகன். அழுகாச்சியா இருந்துச்சு :( :(
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
யாரும் இல்லையே :(
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
- ஒன்று இரண்டு படங்கள் அவ்வப்பொழுது மிகச் சிறந்த படைப்புகளாகவருகின்றன. தவிர மற்றவை எல்லாம் கதை கூட இல்லாமல் இருக்கின்றன.
- மசாலா தடவி ரசிகர்களை மகிழ்விக்க சிறந்த நடிகர்கள் கூட பேரரசு படத்தில் ஊர்பேர் சொல்லிக்கொண்டு பஞ்சு டயலாக் பேசுகிறார்கள்.
- வக்கிரம் மற்றும் வன்முறை நிறைந்த படங்களை எடுத்துவிட்டு உலக சினிமாஎன்று மார் தட்டிக் கொள்கிறார்கள்.
- முகம் சுளிக்க வைக்காமல் கவிதை போன்ற படங்களை நான் விரும்புகிறேன்.
- பேச்சு குறைவாகவும் , கண்கள் மற்றும் முக பாவனைகளால் அர்த்தம் பேசும்பலஆங்கிலப் படங்களைப் பார்த்திருக்கிறேன் .Modern Art போல இருக்கும் படங்கள் . படம் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் கொஞ்சம் மாறிய புரிதல் இருக்கும் ஒவ்வொரு காட்சிக்கும். அதுதான் இயக்குனரின் வெற்றியாகும்.
ஹைய்யோ எல்லாருக்கும் கொஞ்சம் பித்து பிடிக்கும். நாடகங்கள் புதிய உருவம் எடுக்கும் . நல்ல விஷயம் தானே :) !
நான் இப்பொழுது மாட்டிவிடுவது நம்ப ஆயில்யனை :)
என்னை இந்த தொடர் சினிமாப் பதிவில் இழுத்த காந்திக்கு நன்றி :)
ஷட்டில் சர்வீஸ் பேருந்தை மிஸ் செய்ததால் அலுவலகம் வாசலில் நின்றேன் .
கையில் லேப்டாப் .
ஒரு ஷேர் ஆட்டோ என் அருகே வந்து நின்றது .
"இன்னா சார் IT யா உக்காரு எங்க போனும் ?"
"திருவான்மியூர் அண்ணே "
"சரி உக்காரு இங்க "
இடது பக்க வவ்வாலில் கடன் கொடுத்தார் நம்ம டிரைவர் .
(அதாங்க டிரைவர் சீட் அந்தான்ட உள்ள ரெண்டு பக்கமும் மிச்ச இடம் தான் அந்த ரெண்டு வவ்வால்)
"சார் நான் சின்ன புள்ளயா இருக்க சொல்ல கொடை வெச்சிருந்த லேடீஸ்னா டீச்சர் சார் .
அது மாதிரி இந்த கம்ப்யூட்டர் காலத்துல கழுத்துல ஒரு பட்டை போட்ருந்தா அது உங்காளுங்க . நல்லா பொழப்பு ஓடுது சார் உங்களால"
நான் பெருமிதமா தலைய ஆட்டிகினே இருந்தேன்.
"நீ இன்னா மாதிரி வேலை பாக்குற சார் ? "
"நான் Project Management Officer ண்ணா "
"அப்டினா "
அவருக்கு புரிய வைப்பதற்குள் டைடெல் சிக்னல் வந்தது .
(லாப்டோபை காமிச்சு ) "சார் இது .. அந்த பெரிய பொட்டி மாதிரியா சார் ? "
"ஆமாங்க"
"இன்னாமா முன்னேரிடிச்சு சார் "
"ம்ம்ம்"
"சார் ஆமா இவ்ளோ வெச்சிகினு ஏன் சார் ஷேர் ஆட்டோல வர ? ... தனியா ஆட்டோல போக கூடாது ?
உனக்கின்னா ஒரு லட்ச ரூபா மேல சம்பளம் இருக்கும்ல ? பத்து ரூபா குடித்தி இதுல வர ? "
"இல்லைனா அவ்வளவெல்லாம் சம்பளம் இல்லன்னா "
" அப்போ எவ்ளோ சம்பளம் உனிக்கு "
"இருபதாயிரம் ரூபான்னா "
"பொய் சொல்ல்லாத பா ...
விளையாடாதபா சும்மா சொல்லு நான் எதியும் சொல்ல மாட்டேன் "
"சத்தியமா அவ்ளோ தான்னா வாங்குறேன் "
"அப்போ இந்த சின்ன கம்பூட்டர் எல்லாம் வெச்சிக்கினுருக்க "
"அது ஆபிசோடது ண்ணா "
பின்னாடி உக்கார்ந்து இருந்த இரண்டு IT பெண்கள் சிரிப்பு சத்தம் .
"இன்னாப்பா கம்மியா சொல்லுற ....
நான் எல்லாம் ஒரு மாசத்துக்கு 76 -80 ஆயிரம் சம்பாதிக்கிறேன் ..
நமக்கு மூணு வண்டி ஓடுது ...
எல்லாம் போவ 40 ரூபா தேறும் ....
புல்லிங்களை நல்ல படிக்க வெக்குறேன் ..
நீ இன்னாமோ என் சம்பாத்தியத்துல பாதிய சொல்ற ..
அமாம்பா நீங்க சோக்கா பேன்ட்டு போன்லயே நெறையா செலவு பண்றீங்க ..
சரி நீ இன்னா படிச்சுருக்கே ? "
"M.Sc M.B.A. "
"எந்த காலேஜு பா ?"
"அண்ணா யுனிவர்சிட்டி ண்ணா "
"ஓ கிண்டி கவர்னர் மாளிக அன்னாண்ட இருக்கே அதான ? "
"ஆமாண்ணா "
"நான் எட்டான்க்லாசு பைல்லு பா .. அதையெல்லாம் வேடிக்கை தான் பாத்துருக்கேன் "
அடையாறு வந்தது .
"ஆனா நீங்க படிச்சுருகீங்க.. அறிவாளிங்கதான்பா "
திருவான்மியூர் தாண்டி அடையாறு வந்தது கூட தெரியாமல் இருந்தது தான் மிச்சம் !
இந்த சம்பவம் உண்மையாகவே கடந்த வாரம் என் IT நண்பருக்கு நடந்தது :(





