என் சொந்த ஊர் தஞ்சை செல்ல நானும் என் அம்மாவும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு நிழற் குடையில் இரவு 8.30 மணி அளவில் அமர்ந்திருந்தோம் . 9 மணிக்கு SETC சொகுசுப் பேருந்து வருவதாக இருந்தது.
பார்க்கிறேன் பார்க்கிறேன் . 10 மணி வரைக்கும் பேருந்தைக் காணோம் . அப்புறம் ஆடி அசைந்து 10.15 மணிக்கு வந்தது. அதுக்கப்புறம் ,
காலை 3.30 மணிக்கு சோழபுரம் (கும்பகோணம் அருகில்) எல்லாரையும் எழுப்பி விட்டு பேருந்து பிரேக் டவுன் என்று இறக்கிவிட்டார்கள் . நல்லவேளை இன்னொரு பேருந்து எங்களுக்கு உதவிக் கரம் நீட்டியது . தூக்க கலக்கத்தில் பொட்டி படுக்கையுடன் நின்று கொண்டே சென்றோம் கும்பகோணம் பேருந்து நிலையம் வரையில் . அப்புறம் மெதுவாக இடம் கிடைத்தது . சரி அது ஒரு பெரியக் கதை .
இப்போ கொசுவத்தி சுருள் ...
மறுபடியும் , தாம்பரம் பேருந்து நிலையம் . இரவு மணி 9.30 .
நிழற்குடை பெஞ்சில் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தேன் . எனக்கு முன் ரெண்டு பொடியன்கள் (இரட்டையர்கள்) விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு இரண்டு பெண்மணிகள்.
அதே சமயம் ,
பேருந்து விபரங்கள் அலுவலகத்தில் ஒருவர் மைக் வைத்துக்கொண்டு அங்கே வரும் பேருந்துகளின் விபரங்களை கத்தி கத்தி சொல்லிக்கொண்டிருந்தார்.
"மதுரை 8.30 மணி வண்டி யாருங்க"
இங்கு .. என் முன் அமர்ந்திருக்கும் பெண் ..
"அந்தப் பையை எங்கடா வெச்ச ? "
"மதுரை பஸ் வந்துடுச்சு வந்து ஏறுங்க . ரெண்டு பெரியவங்க , ரெண்டு குழந்தைங்க "
"நான் நினைச்சேன் நீ இப்படி செய்வேன்னு "
அரை நிமிடம் கடந்தது .
"யோவ் , மதுரை யாருப்பா ரெண்டு லேடீஸ் ரெண்டு சில்ட்ரன் "
பை கிடைத்தது .
"மதுரை எட்டரை மணி ரெண்டு அரை டிக்கெட்டு , ரெண்டு முழு டிக்கெட்டு யாருமா ... சீக்கிரம் வாங்க "
சில விநாடிகள்....
கடுப்பான மைக்குக்காரர் ,
"அட , மதுரை .... ரெண்டு அரை ரெண்டு புல்ல்லு "
தூக்கத்தையும் மறந்து விழுந்து விழுந்து சிரித்தேன் !
Saturday, September 27, 2008
சொந்த ஊருப் பயணம் இவ்வளவு காமடியாக இருந்ததில்லை !!!
Subscribe to:
Post Comments (Atom)
17 பேர் பதிலுக்கு உளறியவர்கள்:
//நிழற்குடை பெஞ்சில் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தேன் . எனக்கு முன் ரெண்டு பொடியன்கள்//
எனக்கு போட்டியா யாருய்யா இவனுங்க? :((
//தூக்க கலக்கத்தில் படுக்கையுடன் நின்று கொண்டே சென்றோம் கும்பகோணம் பேருந்து நிலையம் வரையில் //
(சொல்லவே இல்ல :))
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..
//அட , மதுரை .... ரெண்டு அரை ரெண்டு புல்ல்லு "
தூக்கத்தையும் மறந்து விழுந்து விழுந்து சிரித்தேன் //
:)))))))))))))))
//பொSaடிnயJaன்i said... //
பொடி அண்ணே ரிப்பிட்டே போடலாம்ன்னு காப்பி பண்ணுனா கையெல்லாம் கொழறுது! :(((((
(எம்புட்டு ரோசனை பண்ணி புரெபைல்ல பேரு மாத்திருக்காரு பாருங்க மக்கா!)
தஞ்சாவூருக்கு இப்போ அதிகமா எப்படி போறாங்க தெரியுமா ? சென்னைல இருந்து அரியலூருக்கு ரயில்ல நாலரை மணிநேரம் ,அங்கிருந்து தஞ்சாவூருக்கு ஒருமணிநேரம் பஸ்ல அவ்ளோதான் .
ரெண்டு அரை ரெண்டு புல்ல்லு "
தூக்கத்தையும் மறந்து விழுந்து விழுந்து சிரித்தேன் !
இதுக்கு எதுக்கு சிரிப்பு ? தொட்டுக்க ஊறுகா ஏதும் தருவதா சொன்னாங்களா ?
யக்கா நீங்க பொடிப்பொண்ணா இல்ல குடிப்பையனா?
என்ன கொடுமை சரவணா ?
யக்கா நீங்க பொடிப்பொண்ணா இல்ல குடிப்பையனா?
//
சிறுமாற்றம்,.......குடிப்பொண்ணா?
( இப்பதான் எல்லா பொண்ணுங்களும் குடிக்க ஆரமிச்சுடுச்சே:))))) )
//புதுகை.அப்துல்லா said...
யக்கா நீங்க பொடிப்பொண்ணா இல்ல குடிப்பையனா?
//
சிறுமாற்றம்,.......குடிப்பொண்ணா?
( இப்பதான் எல்லா பொண்ணுங்களும் குடிக்க ஆரமிச்சுடுச்சே:))))) ) //
அட யாருப்ப இது, எங்க ஊரு பொண்ண வம்பிழுக்குறது?
பக்கத்து ஊர்காரருன்னு பார்த்த, எங்க ஊர் பொண்ண வம்பிழுக்குறீங்க. சீக்கிரமே தஞ்சை பதிவர்கள் சங்கம் ஆரம்பிக்க போறோம். அப்றம் உங்க ஜே.கே.ஆர் சங்கம் எல்லாம் சும்மா தூசுதான்.
:)))))))
@ குடுகுடுப்பை , புதுகை.அப்துல்லா
சிரிச்சது குத்தமாய்ய்யா ? ;) அந்த மைக்குக்காறரை போய் கேளுங்க !
// sanjai (சொல்லவே இல்ல :))
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..
//
பாயும் பாயும் !!!
// ஆயில்யன் said...
//பொSaடிnயJaன்i said... //
பொடி அண்ணே ரிப்பிட்டே போடலாம்ன்னு காப்பி பண்ணுனா கையெல்லாம் கொழறுது! :(((((
(எம்புட்டு ரோசனை பண்ணி புரெபைல்ல பேரு மாத்திருக்காரு பாருங்க மக்கா!)
//
உக்காந்து யோசிபாரோ பொடியன் ? :):)
//
ஜீவன் said...
தஞ்சாவூருக்கு இப்போ அதிகமா எப்படி போறாங்க தெரியுமா ? சென்னைல இருந்து அரியலூருக்கு ரயில்ல நாலரை மணிநேரம் ,அங்கிருந்து தஞ்சாவூருக்கு ஒருமணிநேரம் பஸ்ல அவ்ளோதான் .
ரெண்டு அரை ரெண்டு புல்ல்லு "
தூக்கத்தையும் மறந்து விழுந்து விழுந்து சிரித்தேன் !
இதுக்கு எதுக்கு சிரிப்பு ? தொட்டுக்க ஊறுகா ஏதும் தருவதா சொன்னாங்களா ?
//
அமாம் பல்லவன் எக்ஸ்ப்றேச்சில் போகலாம் நீங்க சொன்ன படியே . ஆனால் , அது மத்திய ரயில் . ஆபீஸ்ல லீவ் குடுக்க லந்து பண்றாங்களே :( :(
@ செந்தழல் ரவி
:)))))
அது மத்திய ரயில்
//
ஆமா அது மத்திய ரயில்தான்...யாரு உங்ககிட்ட மாநில ரயில்னு சொன்னது? :))
பி.கு : எங்களூக்கெல்லாம் மத்தியானம்னு விளக்கமா சொல்லனும் :))))
Post a Comment