என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் அக்டோபர் 2, 2008. தரையிலிருந்து பத்து அடி வானத்திலேயே மிதந்தேன் ரெண்டு நாளைக்கு. இன்று தான் கீழே இறங்கி பதிவு போடுகிறேன் :) என்னுடைய முன் உதாரணம் , என்னுடைய Inspiration எல்லாமே டாக்டர் கலாம் தான் ..
பொறுமையாக வரைந்த கலாமின் பென்சில் வரைபடம் காணாமல் போகவே, அவசர அவசரமாக ஒரு மணி நேரத்தில் வரைந்தேன். சுமாராகத் தான் வந்தது . இருந்தும் அது அவர் கையெழுத்து இட்ட பின்னர் ஏனோ மிகவும் அழகாக தோன்றுகிறது எனக்கு !
இடம் : சாஸ்த்ரா பல்கலைக் கழகம் , தஞ்சாவூர் ( நான் படித்த பல்கலை கழகம் ) .
வெள்ளி விழாவுக்கு கலாம் அவர்கள் வந்திருந்தார் .
வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை :)
Saturday, October 4, 2008
டாக்டர் கலாமின் வாழ்த்துக்கள் !!!
உளறியவர் பொடிப்பொண்ணு நேரம் 9:38 AM Permalink
உளறல் வகை டாக்டர் கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
21 பேர் பதிலுக்கு உளறியவர்கள்:
வாழ்த்துக்கள் நித்யா.. :))
//இருந்தும் அது அவர் கையெழுத்து இட்ட பின்னர் ஏனோ மிகவும் அழகாக தோன்றுகிறது எனக்கு !//
:))))
காதல் கவிதை மாதிரி இருந்தாலும் உன் குழந்தைத் தனம் புரிகிறது... எனக்கு இது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பழய செய்தியா இருந்தாலும்.. இங்கும் வாழ்த்து சொல்லிடறேன்..
( அம்மாடி ப்ளீஸ்.. இனியாவது கலாம் புராணத்த நிறுத்திடு.. என்னால முடியலைமா.. முடியலை.. :( )
சூப்பரூ கலக்கிட்டீங்க போங்க :))
//தரையிலிருந்து பத்து அடி வானத்திலேயே மிதந்தேன்//
ஐ வாண்ட் டூ நோ
வீட்டுக்கு வெளியில வந்து மிதந்துங்களா இல்ல வீட்டுக்குள்ளயா? (ஏன்னா சீலிங்க் மாத்த வேண்டியில்ல வரும்!))
//என்னுடைய முன் உதாரணம் , என்னுடைய Inspiration எல்லாமே டாக்டர் கலாம் தான் ..//
குட் வெரிகுட் !
கலாம் கருத்துகளை எடுத்து வாழ்க்கையில பாலோ பண்ணனும் அப்பத்தான் வாழ்க்கையில ஃப்ளோ நல்லா இருக்கும்! :))
வாழ்த்துக்கள்
நீங்களே வரைந்ததா? நல்லா இருக்கு... எங்க, எப்படி அவரை சந்தீத்தீர்கள் என்று போடலியே?
வாழ்த்துக்கள்... கலக்குங்க :)))
@ பொடியன்-|-SanJai said...
//
( அம்மாடி ப்ளீஸ்.. இனியாவது கலாம் புராணத்த நிறுத்திடு.. என்னால முடியலைமா.. முடியலை.. :( )
//
நிறுத்தமாட்டேன். இன்னும் ஒரு மாதத்திற்கு நீங்க கேட்டு தான் ஆகணும் :)
// தமிழ் பிரியன் said...
நீங்களே வரைந்ததா? நல்லா இருக்கு... எங்க, எப்படி அவரை சந்தீத்தீர்கள் என்று போடலியே//
ஹிஹி.. இவ எங்க வாங்கினா.. படம் வரைஞ்சி அதுக்கு டைட்டில் குடுத்து படத்துக்கு கீழ LKG ல ஆரம்பிச்சி டிசிஎஸ் வரைக்கும் எழுதி வச்சதோட சரி..:))
இவ அப்பா பெத்த நியூஸ் பேப்பரோட பெத்த ரிப்போர்ட்டர்காரு.. அவர் தான் இவளுக்காக வாங்கி குடுத்திருக்கார்.. அப்துல்கலாம் எப்டி ந்டந்தார், எப்டி சாப்ட்டார், எப்டி பேச்னார், எப்டி மூக்கு சொரிஞ்சார்னு இவ கேட்டு டர்ச்சர் பண்ணதுல ஒரு வாரமா இவங்கப்பா த்லைமறைவா இருக்காராம்.. :)
//நிறுத்தமாட்டேன். இன்னும் ஒரு மாதத்திற்கு நீங்க கேட்டு தான் ஆகணும் :)//
இப்போவே போன் நம்பர் மாத்தறேன்.. :))
வாழ்த்துக்கள், நல்லாத்தான் வரைஞ்சு இருக்கீங்க!
(ஆனா என் கண்ணுக்கு என்னமோ நடிகர் ஆனந்த ராஜ் போல தெரியுது )
//வீட்டுக்கு வெளியில வந்து மிதந்துங்களா இல்ல வீட்டுக்குள்ளயா? (ஏன்னா சீலிங்க் மாத்த வேண்டியில்ல வரும்!))
//
எங்க வீட்டு சீலிங் ரொம்ப உயரத்துல இருக்கும் :)
அப்பிடியே ரொம்ப ஜாஸ்தியாக ஆச்சுன்னா , வீட்டு வாசல் தான் !!!
:) :)
// ஆயில்யன் said...
சூப்பரூ கலக்கிட்டீங்க போங்க :))
//
நன்றி நன்றி :) :)
//
நசரேயன் said...
வாழ்த்துக்கள்
//
நன்றி நன்றி :) :)
Nice sketch and more interesting to know that you were greeted by Dr Abdul Kalam.
//
தமிழ் பிரியன் said...
நீங்களே வரைந்ததா? நல்லா இருக்கு... எங்க, எப்படி அவரை சந்தீத்தீர்கள் என்று போடலியே?
//
ஆமாம் நானே வரைந்தது :) மற்ற தகவல்களை பொடியன் உளறிட்டார் சாரி சொல்லிடாரு :)
//ஜி said...
வாழ்த்துக்கள்... கலக்குங்க :)))
//
நன்றி நன்றி :) :)
//
ஜீவன் said...
வாழ்த்துக்கள், நல்லாத்தான் வரைஞ்சு இருக்கீங்க!
(ஆனா என் கண்ணுக்கு என்னமோ நடிகர் ஆனந்த ராஜ் போல தெரியுது )
//
நன்றி நன்றி :) :)
உண்மையை சொல்லனுமா .. ? டக்குனு எனக்கும் ஆனந்த் ராஜ் மாதிரி தான் தோனிச்சு :)
எப்படி கண்டுபிடிச்சீங்க ? :) :)
@ OldSailor said...
Thank you very much for your wishes bhoopathi sir :) :)
எனக்கு ஒரு சந்தேகம் நித்யா..
நீங்க காமெடி பண்றீங்களா? இல்ல சீரியஸா பேசுறீங்களா??
எதுக்கும் இருக்கட்டும்.. வாழ்த்துக்கள் ;-)
இதையாவது தொலைக்காம வச்சுக்கங்க :))
பொடிப்பொண்ணு நல்லா இருக்கு ஓவியம். என்னத்த இருந்தாலும் எங்கூரு பொண்ணு அதுனால ரொம்ப சந்தோசம்.
Post a Comment