சமீபத்தில் தஞ்சை சென்ற பொழுது , எங்கள் மாடி வீட்டில் புதிதாகக் குடி வந்திருக்கும் குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது . ஒரு வாலுப் பொடியன் எட்டிப் பார்த்தான். எதையாவது உடைத்துக் கொண்டும் , கீழே தள்ளி விடுவதும் தான் அவன் முக்கிய வேலை. சார் U.K.G படிக்கிறார். அவனுக்கு பிடித்த நாயகன் கமல். எல்லாக் கமல் பாடல்களையும் அப்படியே ஆடிக்கொண்டே பாடுவான் .
ஒரு முறை அவனை பாடச் சொல்லிக் கேட்டேன். உடனே " ஓம் நமோ நாராயணா " என்று ஆரம்பித்தான் பொடியன். அடுத்த நிமிடம் அருகில் இருந்த தண்ணீர் ஜக் ஒன்றைத் தோளில் வைத்துக்கொண்டான் . ஓடிக்கொண்டே வட்டமடித்தான் அறையை . தூக்கி வாரிப் போட்டது எனக்கு .
"டேய் , என்னடா பண்ற ? "
"அது .................... என்ன மாறியே ஒரு பையன் இப்டி இப்டி ரௌண்டா வருவானா ... அவன் பின்னாடி தண்ணி கொட்டும்.. அப்புறம் அப்புறம் ... கமலை பூட்டு வெச்சு பூட்டிடுவாங்க "
யாரைக் குறை சொல்வது . அந்தப் பொடியனை சொல்ல இயலுமா ? அவனுக்கு அதன் அர்த்தம் தெரியுமா ? He identified himself with the little boy in the movie. அந்த குட்டிப் பையனிடம் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான் இந்தப் பொடியன்.
அல்லது அவனது பெற்றோரை குறை சொல்லலாமா ? பெரியவர்களுக்கு உரியத் திரைப்படங்கள் மற்றும் காட்சிகளை குழந்தைகள் பார்க்காமல் கவனித்துக்கொள்ள வேண்டுமா ?
சினிமாக்காரர்களைக் குறைச் சொல்வதா ? இப்படிப் பட்ட மனதளவில் மற்றும் உடலளவில் துன்புறுத்தும் காட்சிகளை படமாக்குவதால் ? அந்தப் பாடலில் நடிக்க அந்தப் பொடியனின் பெற்றோர்கள் எப்படி தான் அனுமதித்தார்களோ ?
நீங்களே சொல்லுங்கள் !
Thursday, October 30, 2008
சினிமா , குழந்தைகளை சீரழிக்கிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
23 பேர் பதிலுக்கு உளறியவர்கள்:
சொல்றதுக்கு என்ன இருக்கு!
தொலைக்காட்சியில் வரும் சில விளம்பரங்கள் தர்மசங்கடத்திர்க்கு ஆளாக்குவது தெரிந்தது தானே
குழந்தைகள் இருக்கும் போது கார்டூன் சேனல் பார்ப்பதே நமக்கும் நல்லது
//சமீபத்தில் தஞ்சை சென்ற பொழுது , எங்கள் மாடி வீட்டில் புதிதாகக் குடி வந்திருக்கும் குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது . ஒரு வாலுப் பொடியன் எட்டிப் பார்த்தான்.//
யார்ரா அது புதுசா வாரா வாரம் இன்னுமொரு 7.5 வருதேன்னு ஒரு ஆர்வமா பாத்தானா :))))))))
// ? அந்தப் பாடலில் நடிக்க அந்தப் பொடியனின் பெற்றோர்கள் எப்படி தான் அனுமதித்தார்களோ ?
//
ஒரு பூரிப்புத்தான் !
பையன் சினிமா காட்சியை அபப்டியே நடிக்கறானேன்னு :(((
நித்யா என்ன இது... புதுசா இருக்கு... இப்போ இருக்க பசங்க ரொம்ப விவரம்.. இப்போ அவங்கள ஏதும் கண்டிக்க வேண்டாம், அப்படியே அவங்க போக்குல விட்டுடலாம். இன்னும் கொஞ்சம் விவரம் தெரியற வயசுல கண்டிப்பா புருஞ்சுப்பாங்க..
அவங்க சுதந்திரத்துல நாம தலையிட கூடாது...
:(
அந்தப் பாடலில் நடிக்க அந்தப் பொடியனின் பெற்றோர்கள் எப்படி தான் அனுமதித்தார்களோ!
எதுஎன்ன? முந்தானை முடிச்சு படத்தில
ஒரு பச்சை குழந்தைய போட்டு தாண்டுரமாதிரி
படம் எடுக்கலையா?
எல்லாம் பணம்தான்!
டேய்.. எவண்டாவன் எனக்கு போட்டியா? :))))
அடுத்தவாட்டி ஊருக்கு போகும் போது சொல்லு.. நானும் வரேன். நானா அவனா பாத்துடலாம்.. :)))
பொடிப்பொண்ணுக்கே ஷாக்கு குடுத்த பொடியனா..
ஹாஹாஹா..
இது ரொம்பச் சின்ன விஷயம் பொடிப் பொண்ணு....பசங்க எல்லா விஷயத்திலும் சினிமா அல்லது சீரியல் கதாநாயகியை,நாயகர்களைக் காப்பி அடிப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட்.
அன்புடன் அருணா
பொடிப்பொன்னு,
அப்புறம் அந்த காட்சியை எப்படி எடுப்பது? சாகும் முன்பே கடலில் விடப்படுவதால் மகன் செய்ய வேண்டிய அந்திம கிரியைகளை அதுவும் 12ம் நூற்றான்டில் நடக்கும் ஒரு கதையமைப்பின் காட்ட்சியை எப்படி எடுப்பது?
குழந்தைகளுக்கும் அந்திம காரியம் என்றால் என்ன என்று சொல்லிக்கொடுப்பது அவசியம் தானே? அதே குழந்தை வேறு ஒரு மிகைப்படுத்தப்பட்ட நடிப்பையோ அல்லது நடனத்தையோ செய்து காட்டினால் சந்தோஷப்படுவீர்கள் அல்லவா? சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம்.
இப்படி எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பது மட்டுமே முழு நேரத் தொழிலாகி விட்டால் என்ன ஆகுமோ என்று பயமாக இருக்கிறது.
//அந்தப் பாடலில் நடிக்க அந்தப் பொடியனின் பெற்றோர்கள் எப்படி தான் அனுமதித்தார்களோ // அது ஒரு சினிமா. அந்த காட்சியில் நடித்தவன் ஒரு நடிகன். நீங்கள் சொல்வதன் அடிப்படையில் சிந்தித்தால் சினிமாவில் வில்லனே இருக்க முடியாது.
// வால்பையன் said...
சொல்றதுக்கு என்ன இருக்கு!
தொலைக்காட்சியில் வரும் சில விளம்பரங்கள் தர்மசங்கடத்திர்க்கு ஆளாக்குவது தெரிந்தது தானே//
அமாம் :(((((((
//Blogger வால்பையன் said...
குழந்தைகள் இருக்கும் போது கார்டூன் சேனல் பார்ப்பதே நமக்கும் நல்லது//
இப்பொழுதெல்லாம் கார்டூன் கூட வயலென்சு நிறையா இருக்கு :( :(
//யார்ரா அது புதுசா வாரா வாரம் இன்னுமொரு 7.5 வருதேன்னு ஒரு ஆர்வமா பாத்தானா :))))))))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/// ? அந்தப் பாடலில் நடிக்க அந்தப் பொடியனின் பெற்றோர்கள் எப்படி தான் அனுமதித்தார்களோ ?
//
ஒரு பூரிப்புத்தான் !
பையன் சினிமா காட்சியை அபப்டியே நடிக்கறானேன்னு :(((///
குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைப்பதே குற்றம் என்று நினைக்கிறேன் . - குழந்தைத் தொழிலாளர்கள் போல் :(
//நித்யா என்ன இது... புதுசா இருக்கு... இப்போ இருக்க பசங்க ரொம்ப விவரம்.. இப்போ அவங்கள ஏதும் கண்டிக்க வேண்டாம், அப்படியே அவங்க போக்குல விட்டுடலாம். இன்னும் கொஞ்சம் விவரம் தெரியற வயசுல கண்டிப்பா புருஞ்சுப்பாங்க..
அவங்க சுதந்திரத்துல நாம தலையிட கூடாது...//
நீங்கள் சொல்வதும் சரி தான். அனால் , அவர்களிடம் உள்ள Innocence சினிமா அழிக்கிறது என்று எனக்கு தோன்றுகிரது
//Blogger தமிழ் பிரியன்//
வருகைக்கு நன்றி :)
Blogger ஜீவன் said...
அந்தப் பாடலில் நடிக்க அந்தப் பொடியனின் பெற்றோர்கள் எப்படி தான் அனுமதித்தார்களோ!
எதுஎன்ன? முந்தானை முடிச்சு படத்தில
ஒரு பச்சை குழந்தைய போட்டு தாண்டுரமாதிரி
படம் எடுக்கலையா?
எல்லாம் பணம்தான்!//
ரொம்ப உண்மை ஜீவன் !!!!
எந்த சினிமா இப்ப குழந்தைகள் பார்க்கிற மாதிரி இருக்கு சொல்லுங்க? குடும்ப படம் என்றாலும் ஒரு காட்சியாவது குழந்தையுடன் பார்க்கும் பொழுது நெளிய வைப்பது போல் உள்ளது. எனவே, exposure அதிகம் உள்ள இக்காலத்தில், குழந்தைகளைக் கையாள பெற்றோர் தான் கற்றுக் கொள்ள வேண்டும். காசு கொடுத்து பார்க்கும் சினிமாவை விடுங்கள், வீட்டிற்குள் நுழைந்து சீரழிக்கும் தொலைக்காட்சியை என்னென்பது? என் வீட்டில் என் குழந்தைகள் டி.வி. பார்த்தாலும் சுட்டி டிவி தானே என்ற நிம்மதியுடன், வேறு சேனலே திருப்புவது இல்லை...
பாத்துங்க உங்களையும் நடிக்க கூப்பிட போறாங்க பொடிப்பொண்ணு ரோல்ல.
Dont take me arguing or doing vithanda vatham.
today it is cinema , yesterday it was something else. tommorrow it will be something else. I was not watching these kind of movies but there plenty of things to pollute me while movies were not that popular through TV. but still many things polluted me So ?? when i was getting polluted my grand mother was refering to something which she was not used during her childhood. She was infact telling pazha pona intha school pasanga eppadi ellam pesi kedukran en pera pullaiya. so it is world. polluting factors existed , exists and will exists. It takes different form.
in good old days, paati and thatha used to take us for a walk, buy sundal etc and tell lot of moral stories.
we played dhaya kattam, pallankuzhi etc., and while playing, they taught us lot of interesting things such as strategic planning which will lead to victory etc. so we had an alternate for entertainment when there is no tv.
but in today's world, meeting paati and thatha takes place only once in a year or so! the only recreation for kids is tv. parents allow their kids to watch tv because only then they will be relieved by their wards to do other works.
the fault is with us. kootu kudumbam ippo verum books la dhan iruku!
Post a Comment