Friday, December 18, 2009

வேட்டைக்காரன் - விமர்சனம் !!!


'முதல் நாள் முதல் திரையில்' மாயாஜால் திரையரங்கில் வேட்டைக்காரன் பார்த்தேங்க்னா. .

தூத்துக்குடியில் இருந்து பிளஸ் 2 முடித்துவிட்டு , கல்லூரி சேர சென்னைக்கு வரும் ஒரு இளைஞன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு பெரிய ரௌடியின் பகைக்கு உள்ளாகிறான். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறான் - தன் காவல் துறை அதிகாரி ஆகும் கனவில் வெற்றி பெறுகிறானா , இல்லை தோற்று விடுகிறானா என்பது தான் கதை.


விஜய் படம் என்பதால் நிறைய காமெடி காட்சிகள் நிறையா தான் இருக்கும் (கில்லி மாதிரி) என்று எதிர்பார்த்து சென்றேன். முன் பாதியில் சில காமெடி காட்சிகளே இருந்தன. பின் பாதியில் மனோபாலா வரும் காட்சிகளில் திரை அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.

அனுஷ்கா அழகாக இருக்கிறார் . நடிப்பும் கூட நன்றாக வருகிறது . அனால், மூன்று பாட்டு , முதல் பாதியில் கணிசமான காட்சிகள் மட்டும் அவருக்கு. பின் பாதியில், காதலனை நினைத்து உருகுவதற்கும், படத்தின் ஓட்டத்தில் பாடல்களைத் திணிப்பதற்கும், வில்லனிடம் மாட்டிகொள்வதர்க்கும் மட்டுமே பயன்படுகிறார்.


பாடல்கள் எல்லாம் படத்தின் ரிலீஸ் முன்பே சூப்பர் ஹிட் ! பாடல் காட்சியமைப்பில் இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம் என்று எனக்கு தோன்றியது. விஜயின் உடைகள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். யாருப்பா அவரோட உடைகளை தேர்வு செய்தது இந்த படத்தில்?

'நான் அடிச்சா தாங்கமாட்டே' பாடலில் ஜூனியர் விஜய் தான் ஹைலைட். அழகாக ஆடுகிறார் சஞ்ஜய். அப்பா போலவே வர வாழ்த்துக்கள் !
'கரிகாலன்' பாடல் பார்க்க நன்றாக இருந்தது. 'ஒரு சின்ன தாமரை' - பாடல் முழுவதும் விஜயின் புதிய சிகை அலங்காரம் தான் பளிச்சிடுகிறது. அந்தப் பாடலில் ஏன் விஜய் அவ்வளவாக ஆடவே இல்லை :( ? சின்ன சின்ன நடன அசைவுகளாவது செய்திருக்கலாமே ! பாடலில் நடன அசைவுகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன.


பல சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தன. நிறைய கிராபிக்ஸ் உபயோகிக்கப்பட்டுள்ளது . விஜய் அந்தரத்தில் சுழட்டி சுழட்டி அடிக்கிறார். பல வில்லன்கள் அந்தரத்தில் மிதக்கின்றார்கள். அத்திரப்பள்ளி நீர் வீழ்ச்சியிலிருந்து விஜய் குதிக்கிறார். அதில் இருந்து உயிரோடு தப்பிகிறாரா என்பது இடைவேளை கிளைமாக்ஸ்.

படம் முழுவதும் விஜய் அழகாக இருக்கிறார். காட்சிகளில் நடிப்புத் திறமை பளிச்சிடுகிறது. மற்ற நடிகர்களும் நன்றாகவே நடிக்கிறார்கள். வில்லன் 'செல்லா'வைப் பார்த்தால் எனக்கே பயம் வந்துவிட்டது. ஆனால், செல்லாவின் அப்பா வேத நாயகத்துக்கு ஒரு 'பிளாஷ்பாக்' வேறு தேவையா? முன்பெல்லாம் கதாநாயகனுக்கு பிளாஷ்பாக் என்பது போய் இப்போது வில்லனுக்கும் பிளாஷ்பாக் என்று ஆகிவிட்டது.



மேலும் , படத்தில் உள்ள எல்லா கதாப்பாதிரங்களுக்கும் (வில்லன்கள் உட்பட) ஒரு 'Characterization' முதல் காட்சி இருக்கிறது. 'இவள் இப்படிப்பட்டவள்' , 'இவன் இப்படிப்பட்டவன்' என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள். அந்த காட்சிகள் எதுவும் படத்தின் கதையுடன் ஒட்டவில்லை.


முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இடைவேளைக்குப் பின்னர் விறுவிறுப்பில் கொஞ்சம் தொய்வு. சில காட்சிகள் பகவதி படத்தை நினைவு படுத்துகின்றன. ஒரு முறை பார்க்கலாம் .

என்னுடைய மதிப்பெண்கள் : 5.5 /10

பகவதி + கில்லி + பாட்ஷா + திருப்பாச்சி + கிரீடம் + அனுஷ்கா = வேட்டைக்காரன் !

10 பேர் பதிலுக்கு உளறியவர்கள்:

Nataraj said...

நல்ல விமரிசனம்ங்க.. வாழ்த்துக்கள்.

காரணம் ஆயிரம்™ said...

சே வேட்டைக்காரன் முன்னாலேயே வந்திருந்தா இந்த ஐந்து படத்துக்கான செலவு மிச்சம் ;)

கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

SanjaiGandhi™ said...

தினத்தந்தியில விமர்சனம் எழுதறது நீ தான்? :)

//என்னுடைய மதிப்பெண்கள் : 5.5 /10//

மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு மார்க் போட ஆள் வேனுமாம். :)

//பகவதி + கில்லி + பாட்ஷா + திருப்பாச்சி + கிரீடம் + அனுஷ்கா = வேட்டைக்காரன் !//

5 படம் + அனுஷ்கா = 5.5. அப்போ அனுஷ்கா அரை டிக்கெட்டா? கொலகார பாவி... :))

SanjaiGandhi™ said...

//முன்பெல்லாம் கதாநாயகனுக்கு பிளாஷ்பாக் என்பது போய் இப்போது வில்லனுக்கும் பிளாஷ்பாக் என்று ஆகிவிட்டது. //

ஹாஹா.. என்னடா நித்யா ஸ்லாங்க் இல்லையேன்னு பார்த்தேன்.. :))

Matangi Mawley said...

vijay nadikkakkooda seivaarungalaa?? need to see! :)

good one here!

please do check a surprise venture- my attempt at writing tamil: maiththuli.blogspot.com

would love your comments on it!

சக்தியின் மனம் said...

பாக்கமாட்டேன் பாக்கமாட்டேன் பாக்கமாட்டேன்

பித்தனின் வாக்கு said...

ஆனாலும் பொடிப்பெண்ணு பேரு வைச்சிக்கிட்டு உங்களுக்கு ரொம்ப குசும்புங்க, விஜய் நன்றாக நடிக்கின்றார்ன்னு எழுதறிங்க பாருங்க,இதுக்கே ஒரு தைரியம் வேணும்.ஆவ்வ்வ்வ்வ்.

எனக்குத் தெரிந்து பூவே உனக்காக படத்தைத் தவிர எல்லா படத்திலும் அவர் குணஷ்டை சேட்டைகள்தான் அதிகம் பண்ணுகின்றார். நன்றி.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பார்வையாளன் said...

super