Friday, December 24, 2010

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஒரு புது சவால் !

நம்ம ஊரு ஜல்லிக்கட்டு வீரர்கள் எருதுகளை எளிதாக அடக்கிவிட்டு , பரிசையும் வாங்கிக்கொண்டு அதிகமாக அலம்பலும் ஆர்பாட்டமும் செய்கிறார்கள் என்று தெரிய வந்ததால் இனி அவர்கள் அலம்பலுக்கு ஆப்பு வைக்க முடிவு செய்துள்ளோம்.

இதோ
அடுத்த வருட ஜல்லிக்கட்டுக்கு இந்த "வதூசி" எருதுகளை தான் அனுப்பப் போகிறோம் !


நமது தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு வீரர்கள் இந்த மாதிரி எருதுகளை அடக்குவார்களா ? - இல்லை இந்த கொம்பைப் பார்த்த உடனே எட்டு ஊருக்கு எருதுகளைப் போல் நான்கு கால் பாய்ச்சலில் வீடு திரும்புவார்களா ?


ஏன்டா இந்த வம்பு ? உயிரை மாய்த்துக்கொள்ள நான் தயாராக இல்லை என்று சொல்லிக்கொண்டே புறமுதுகிட்டு ஒடுவார்களோ ?


ஜல்லிக்கட்டு வீரர் 1: " எத்த தடி " !!!!!


ஜல்லிக்கட்டு வீரர் 2 : " இதுங்க கொம்பை வைத்துக்கொண்டு ஒரு குத்து குத்தினா குடல் கூட மிஞ்சாது போலிருக்கே .. ஐயோ சாமி.. நான் இனிமே ஜல்லிக்கட்டு பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன் ! "


ஜல்லிக்கட்டு வீரர் 3 : "அடப் பாவிகளா ... ஜல்லிகட்டுக்கு வெச்சுட்டான்யா ஆப்பு "


இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வதுசி எருது : "அந்த பயம் இருக்கட்டும் ! "

// இந்தப் பதிவு வெறும் கற்பனையே //

1 பேர் பதிலுக்கு உளறியவர்கள்:

ஆயில்யன் said...

சரியாக ஒரு வருடம் கழித்து ரீ-எண்ட்ரீ அதுவும் டெரராக ம்ம்ம்

எனக்கு அந்த ப்ளாக் டைட்டில் - கருகிப்போகும் ரஸ்க் - போட்டோ புடிச்சிருக்கு ! :)